திடீரென உயிர் பிரிந்த லொள்ளு சபா ஆண்டனி

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நகைச்சுவை நிகழ்ச்சியில் சந்தானத்துடன் பல எபிசோடுகளில் ஒன்றாக நடித்தவர் ஆண்டனி.
சந்தானம் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்ததும், ‘தம்பிக் கோட்டை’ உள்ளிட்ட சில படங்களில் சந்தானத்தின் நண்பராக காமெடி கதாபாத்திரங்களில் நடித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார்.
அவருக்கு சந்தானம் மற்றும் லொள்ளு சபா நடிகர்கள் சிலர் உதவினர். உடல்நிலை மோசமடைந்த நிலையில் இன்று (ஏப்.,9) காலை திடீரென அவரது உயிர் பிரிந்தது.