மாதவன் – சித்தார்த்துடன் கூட்டணி அமைக்கும் நயன்தாரா!

மாதவன் – சித்தார்த்துடன் கூட்டணி அமைக்கும் நயன்தாரா!
  • PublishedApril 13, 2023

தமிழ்ப் படம், விக்ரம் வேதா,  இறுதி சுற்று,  மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த  YNOT
ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

இவர் இயக்கும் முதல் படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு அடுத்தப்படியாக மாதவன்,  சித்தார்த்  உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.

டெஸ்ட் ‘டெஸ்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.  இந்த மோஷன் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *