நீயா, நானா என்ற போட்டியில் சந்தமில்லாமல் மோதிக்கொள்ளும் விஜய் டிவி நட்சத்திரங்கள்!

நீயா, நானா என்ற போட்டியில் சந்தமில்லாமல் மோதிக்கொள்ளும் விஜய் டிவி நட்சத்திரங்கள்!
  • PublishedApril 13, 2023

அஜித்-விஜய், சிம்பு-தனுஷ், ரஜினி-கமல் இப்படி சினிமா துறையில் ஒவ்வொரு காலக்கட்டத்தில் இருவருக்கு இடையில் போட்டி இருக்கும்.

அந்த வரிசையில் தற்போ விஜய் டிவி நட்சத்திரங்கள் இருவருக்கு இடையில் நீயா, நானா என்ற போட்டி எழுந்துள்ளது.

அண்மையில்  வளரும் நடிகராகவே தெரிந்த கவின் இப்போது டாடா படத்திற்கு பிறகு புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார். இந்த படம் நகர்ப்புறங்களில் மல்டிப்ளக்ஸ் ரசிகர்களை இந்த படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது. டாடா படம் வெற்றியால் கவின் ரேஞ்ச் எங்கேயோ போய்விட்டது.

இப்பொழுது இளம் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என கவினை வட்டம் இட்டு வருகின்றனர். சமீபத்தில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தில் கவின் ஒப்பந்தமாகி இருந்தார்.

ஊர் குருவி என்ற படத்தில் கவின் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்பொழுது கவினை நீக்கிவிட்டு தூங்கு மூஞ்சி ஹீரோவை புக் செய்து விட்டார்களாம்

முதலில் கவினை போன்றே சீரியல்களில் என்ட்ரி கொடுத்து, அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகர் அஸ்வின். இவர் வெள்ளித்திரைக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

ஆனால் இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது 40 கதையை கேட்டுவிட்டு தூங்கிவிட்டேன் என ஓவர் கெத்து காட்டியதால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார்.

இதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டாலும் அவரை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினார்கள். அதன்பிறகு பல மாதம் சினிமாவை விட்டுவிலகி இருந்த அஸ்வின் மறுபடியும் பிரபு சாலமன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான செம்பி படத்தின் மூலம் மாஸ் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்திற்கு பிறகு அஸ்வினுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

ஆகையால் தற்போது இருக்கும் சூழலை வைத்துப் பார்க்கும்போது தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களான கவின் மற்றும் அஸ்வின் இருவரும் தான் அடித்துக் கொள்ளும் அளவுக்கு போட்டி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *