ரீ- என்ட்ரி கொடுத்தும் பயனில்லை : ஓவர் திமிரால் பறிப்போன படவாய்ப்பு!

ரீ- என்ட்ரி கொடுத்தும் பயனில்லை : ஓவர் திமிரால் பறிப்போன படவாய்ப்பு!
  • PublishedApril 13, 2023

மீம்ஸ் நாயகன் நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போது ரீ என்ட்ரி கொடுத்திருந்தாலும், அவருடைய படங்கள் அவ்வளவாக எடுபடுவதில்லை.

ஆரம்பத்தில் வைகை புயல் வடிவேலுவிற்காகவே திரைப்படம் பார்க்கும் ஒரு கூட்டமும் இருந்தது. ஆனால் தற்போது அவருடைய இடத்தை சூரி, சந்தானம், யோகிபாபு ஆகியோர் நிரப்பி வருகிறார்கள்.

இதில் சூரி மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துள்ளநிலையில், களத்தில் ஒற்றை ஆளாக குதித்திருக்கிறார் யோகி பாபு.

தற்போது இயக்குனர்கள் இவருடைய வீடு தேடிபோய் கால்ஷீட் கேட்கிறார்களாம். அந்தளவிற்கு உயர்ந்துள்ளார். இந்நிலையில், வடிவேலுவின் படம் ஒன்றும் தற்போது யோகிபாபுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ள ஒரு படத்தில் வடிவேலு காமெடியனாக நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் இப்படத்திலிருந்து வடிவேலு தேவையில்லை என இரண்டே நாட்களில் அப்படக்குழு அவரை நீக்கியுள்ளனர். வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறிய கதையாக வடிவேலு மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்.

வடிவேலு திமிராக நடந்துக்கொண்டதால் இப்படத்திலிருந்து அவரை நீக்கியுள்ளதாக காரணம் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்துஇ நடிகர் யோகிபாபு உடனடியாக இப்படத்தில் நடிக்க படக்குழு தேர்வு செய்துள்ளனர். இக்கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் படக்குழு அவரை செலக்ட் செய்தனர். ஆனால் அவரது தேவையில்லாத திமிரால் தற்போது விஜய் சேதுபதி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *