மகாராஜா பட இயக்குனருக்கு அடிச்ச ஜாக்பாட்..

மகாராஜா பட இயக்குனருக்கு அடிச்ச ஜாக்பாட்..
  • PublishedDecember 31, 2024

இந்த ஆண்டு ரிலீஸ் ஆன படங்களில் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மகாராஜா. விஜய் சேதுபதி தன்னுடைய ஐம்பதாவது படமாக இந்த படத்தை தேர்ந்தெடுத்து பெரிய வெற்றியை பெற்றார்.

படத்தின் திரைக்கதை தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பெரிய அளவில் பாராட்டை பெற்றது. படத்தின் தியேட்டர் வசூல் நூறு கோடியை தாண்டி வசூல் வேட்டையாடியது.

OTT தளத்தில் ரிலீசான பிறகு பல தரப்பட்ட ரசிகர்களாலும் இந்த படம் கொண்டாடப்பட்டது.

சீனாவில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தையொட்டி அந்த நாட்டில் இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. மூன்றே நாளில் ரஜினியின் எந்திரன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது.

21 நாளில் பாகுபலி படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது. இதை தொடர்ந்து ஜப்பான் நாட்டிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இந்த நிலையில் படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுக்கு பெரிய ஜாக்பாட் அடித்திருக்கிறது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி சமீப காலமாக இளம் இயக்குனர்களுடன் பணியாற்றுவதை பெரிய அளவில் விரும்பி வருகிறார்.

மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து நித்திலன் சுவாமிநாதன் உடன் படம் பண்ணுவதற்கு சிரஞ்சீவி விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

இருவருக்கும் இந்த புது ப்ராஜெக்ட் குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *