கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் தங்கலான் படத்தில் இறக்கும் மாளவிகா!

கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் தங்கலான் படத்தில் இறக்கும் மாளவிகா!
  • PublishedJune 2, 2023

நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.   பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தபடம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில்,  பசுபதி,  மாளவிகா மோகனன்,  பார்வதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகின்றனர்.

இடைவிடாது படப்பிடிப்பை நடத்தி வந்த பட குழுவினர் இன்னும் ஓரிரு வாரங்களில் ஒட்டு மொத்த ஷூட்டிங்கை முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் மாளவிகா இப்படத்தில் தன்னுடைய கடின உழைப்பை கொடுத்திருந்தது பற்றி ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த கேரக்டருக்காக அவர் சிலம்பம்,  ஜிம்னாஸ்டிக்,  ரோலிங்,  கிங்ஸ்,  ஜம்ப்ஸ் போன்ற பல வித்தைகளையும் கற்றுக் கொண்டாராம். அது மட்டுமின்றி பீரியட் படமாக தங்கலான் உருவாவதால் மேக்கப் உள்ளிட்டவற்றிலும் வித்தியாசம் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *