சிக்கலில் விடாமுயற்சி திரைப்படம் : அஜித்தின் முடிவுதான் என்ன?

சிக்கலில் விடாமுயற்சி திரைப்படம்  : அஜித்தின் முடிவுதான் என்ன?
  • PublishedJune 2, 2023

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், தற்போது அவர் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

மிகப் பெரிய இழுப்பறியில்தான் படக்குழுவினர் இந்த படத்திற்கு விடாமுயற்சி என்ற பெயரையே வைத்தனர். ஆனால் அதற்கு பிறகு படம் பற்றிய எந்த அப்டேட்டம் வெளியாகவில்லை.

படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் சிக்கலில் உள்ளதால் படப்பிடிப்பு தாமதமாகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், லைகா நிறுவனம் தங்களுடைய நிலையை அஜித்குமாரிடம் தெளிவாக சொல்லிவிட்டார்களாம்.

அதாவது. இனி என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். இந்த படம் எப்படியும் கைவிடப்படாது. அதற்கு பதிலாக கொஞ்சம் காலதாமதமாக லைகா நிறுவனமே தயாரிக்கும்.

அல்லது வேறு ஒரு நிறுவனத்திடம் இந்த படம் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தற்போதைக்கு சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக கூட தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *