”எங்ககிட்ட மோதாதே” நிகழ்ச்சி மூலம் கம்பேக் கொடுக்கவுள்ள விஜய் டிவி நட்சத்திரம்!

”எங்ககிட்ட மோதாதே” நிகழ்ச்சி மூலம் கம்பேக் கொடுக்கவுள்ள விஜய் டிவி நட்சத்திரம்!
  • PublishedJune 2, 2023

டிடி இளம் வயதில் இருந்து விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அதுவும் சூப்பர் சிங்கர் என்றால் டிடி தான்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை டிடி தொகுத்து வழங்கி உள்ளார். காபி வித் டிடி,  ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளும் இதில் அடங்கும். இந்நிலையில் சமீபகாலமாக அவருடைய காலில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதில்லை.

அத்துடன் டிடியால் நிறைய நேரம் ஒரே இடத்தில் நிற்க முடியாது. சமீபகாலமாக சில நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போதும் ஸ்டிக் வைத்து தான் டிடி நடந்து வருகிறார்.

மேலும் விஜய் டிவியில் இப்போது பிரியங்கா,  ரக்சன்,  மாகாபா போன்ற தொகுப்பாளர்கள் தான் பணியாற்றி வருகிறார்கள். டிடி எப்போது மீண்டும் பழைய பொலிவுடன் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

Tamilmirror Online || தொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

இப்போது மீண்டும் விஜய் டிவி இடமே தஞ்சமடைந்துள்ளார் டிடி. அதாவது எங்ககிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை டிடி சில வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வந்தார். இதன் முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆகையால் இரண்டாவது சீசனும் நடத்தப்பட்டு வெற்றி கண்டனர்.

இந்த சூழலில் சீசன் 3 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இந்நிகழ்ச்சி மூலம் டிடி விஜய் டிவிக்கு மீண்டும் கம்பேக் கொடுக்க இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *