‘தலைவர் 171’-இல் ரஜினிக்கு வில்லனாகும் ஹீரோ…. இவருக்கு இப்படி ஒரு பிளேஸ்பேக் இருக்கா?
லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததக உருவாக உள்ள திரைப்படம் தலைவர் 171.
இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தை மாபெரும் பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.
அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை லோகேஷ் தொடங்காவிட்டாலும், அதில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி தலைவர் 171 படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் சிவகார்த்திகேயனும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தின் மூலம் தன்னுடைய தலைவன் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற நடிகர் சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் ஆசை நிறைவேற உள்ளது.
இதுதவிர எக்கச்சக்கமான நடிகர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ள லோகேஷ், மேலும் சில நடிகர்களையும் இதில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.
அதில் ஒருவர் தான் மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமார். இவர் இதற்கு முன்னர் இருமுறை லோகேஷ் இயக்கத்தில் நடிப்பதாக இருந்து, அது கைகூடாமல் போனது. அதன்படி விக்ரம் படத்தில் ரசிகர்களின் மனம்கவர்ந்த கேரக்டரான ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் பிருத்விராஜை தான் நடிக்க வைக்க வேண்டும் என்கிற முடிவில் இருந்தாராம் லோகேஷ். ஆனால் அவர் இதற்கு நோ சொன்னதை அடுத்து தான் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்தார்.
இதையடுத்து விஜய்யின் லியோ படத்தில் அர்ஜுன் நடித்த ஹரால்டு தாஸ் கேரக்டரிலும் பிருத்விராஜை நடிக்க வைக்க ஆசைப்பட்டுள்ளார் லோகி. அவர் வேறுபடங்களில் பிசியாக இருந்ததால் இதில் நடிக்க முடியாமல் போனது.
பின்னர் விஷாலுக்கு கதை சொல்லி அவரும் ரிஜெக்ட் செய்ததை அடுத்து தான் அர்ஜுன், ஹரால்டு தாஸ் ஆக நடித்தார். இந்த இரண்டு படங்களிலும் லோகேஷ் உடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பிருத்விராஜ், தலைவர் 171 படம் மூலம் அந்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.