ஜனநாயகன் குறித்து சில விஷயங்களை மமிதா பகிர்ந்துள்ளார்

மலையாள திரையுலகில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் மமிதா பைஜூ.
கடந்த ஆண்டு பிரேமலு என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘ரெபல்’ படத்தில் நடித்து அறிமுகமானார் மமிதா.
தற்போது தளபதி விஜய்யின் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜனநாயகன் படம் குறித்து சில விஷயங்களை மமிதா பைஜூ பகிர்ந்துள்ளார். அதாவது, அடுத்த மாதத்தில் இருந்து ஜனநாயகன் படம் குறித்த அப்டேட் வந்துகொண்டே இருக்குமாம்.
படம் வேற லெவலில் உருவாகி கொண்டு இருப்பதாகவும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் ஆக இந்த படம் அமையும் என்றும், தரமான சம்பவம் உண்டு. விஜய் சாரை வேற மாதிரி பார்ப்பீர்கள். தொடர்ந்து அப்டேட் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்