மன்சூர் அலிகான் தன் குருவுக்கு செய்த மரியாதையை பார்த்தீர்களா?

மன்சூர் அலிகான் தன் குருவுக்கு செய்த மரியாதையை பார்த்தீர்களா?
  • PublishedDecember 30, 2023

விஜயகாந்த் நடிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான ‘கேப்டன் பிரபாகன்’ படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான் நடித்து இருந்தார்.

இப்படம் மன்சூர் அலிகானுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு பல படங்களில் மன்சூர் அலிகான் நடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கண்டனங்களுக்கும், சர்ச்சையிலும் மாட்டிய மன்சூர் அலிகானின் நேற்றைய செயல் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி அறிந்த மன்சூர் அலிகான் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்றார்.

அங்கு விஜயகாந்த் உடலுக்கு மன்சூர் அலிகான் அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர், சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டது. சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக மக்களின் வெள்ளத்தில் ஊர்ந்து சென்ற வாகனத்துடன் நடந்து சென்றார்.

பின்னர் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இரவு கடந்தும் அவரது உடலை விட்டு கொஞ்சம் கூட நகராமல் இருக்கிறார் மன்சூர் அலிகான்.

நேற்று காலை தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்ட போதும் கூடவே சென்றார். நேற்று மாலை விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யும்வரை மன்சூர் அலிகான் அருகிலேயே இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *