காணாமல் போன விஷால் பட நடிகை : வைரலாகும் காணொலி!
விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் இவருடன் இணைந்து லத்தி படத்தில் நடித்திருந்த நடிகை சுனைனா கடத்தப்பட்டதாக வெளிவந்த தகவல் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழில் காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது ரெஜினா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த சூழலில் இவர் சில தினங்களுக்கு முன்பு சென்னை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு தன் தோழியுடன் வந்திருக்கிறார். இது குறித்து தன் சோசியல் மீடியா பக்கத்திலும் அவர் பதிவிட்டு இருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை.
அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கிறது. சுனைனா கடத்தப்பட்டாரா என்ற கேள்வியுடன் ரெஜினா பட தயாரிப்பு தரப்பு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது.
இதைப் பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை மிக வேகமாக சோசியல் மீடியாவில் வைரல் செய்து வந்தனர். அது மட்டுமின்றி சுனைனாவுக்கு என்ன ஆனது என்ற கேள்விகளும் எழ தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.