என்ன அழகு!! இவங்களுக்கு மட்டும் வயசே போகாதா? மீனா வெளியிட்ட போஸ்ட்…

என்ன அழகு!! இவங்களுக்கு மட்டும் வயசே போகாதா? மீனா வெளியிட்ட போஸ்ட்…
  • PublishedMay 16, 2024

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 15 ஆண்டுகளாக புகழ்பெற்ற நடிகையாக வலம்வந்துகொண்டு இருக்கின்றார்.

நடிப்புக்காக படிப்பை பள்ளிக்கூடத்தில் முடிக்காவிட்டாலும், திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலம் முதுகலை வரலாறு பட்டம் பெற்றுள்ளார்.

 

இவர் 2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

நைனிகா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தெறி படத்தில் அறிமுகமானார். மகள் மற்றும் மனைவியை நடிப்பதற்கு அனுமதித்த வித்யாசாகர் நுரையீரல் தொற்று ஏற்பட்டு காலமானார்.

தற்போது 47 வயதாகும் மீனா படங்களில் குணச்சித்திர ரோல்கள் மற்றும் டிவி ரியாலிட்டி ஷோ நடுவர், விளம்பரங்கள் என பலவற்றில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் மீனா பல வீடியோக்கள் மற்றும் படங்களை வெளியிட்டு வருகின்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *