“தளபதி 68”இல் இணைந்த மற்றுமொரு நட்சத்திரம்… அட இவரா??

“தளபதி 68”இல் இணைந்த மற்றுமொரு நட்சத்திரம்… அட இவரா??
  • PublishedDecember 26, 2023

லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 68 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘லியோ’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வருவதால், ரசிகர்கள் மத்தியில் ‘தளபதி 68’ மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஏ. ஜி.எஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகும் ‘தளபதி 68’ ன் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் டீஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் விஜய்யின் பழைய தோற்றத்தைப் பயன்படுத்தியுள்ளதாகவும், பகவதி, யூத் படத்தில் இருந்த விஜய் தோற்றம் இப்படத்தில் 10 நிமிட காட்சியாக இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தில்ஏராளமான நட்சத்திரக் கூட்டமே நத்து ருகின்றனர். நாளுக்கு நாள் இந்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

அந்த வகையில் தற்போது இணைந்த புதிய நட்சத்திரம் யார் தெரியுமா? பிரபல தெலுங்கு நடிகரும் சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யா தளபதி 68இல் நடிக்கின்றார்.

இது குறித்த செய்தியை அவரே தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்,

 

https://twitter.com/chaiya_akkini/status/1739265868947718627

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *