பிக்பாஸ் வீட்டில் சரவண விக்ரம் வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் சரவண விக்ரம் வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?
  • PublishedDecember 26, 2023

திண்ணையில் இருந்தவனுக்கு கெடச்சா தான் அதிர்ஷ்டம் என பழைய பழமொழி ஒன்று இருக்கிறது. அது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சரவண விக்ரமுக்கு தான் பொருந்தும்.

பிக் பாஸ் வீட்டிற்குள் எந்த விஷயமும் பெரிதாக செய்யாமல், எந்த ஒரு கண்டன்டும் கொடுக்காமல் 80 நாட்களைக் கடந்து இருந்தவர் தான் சரவண விக்ரம்.

இவர் கடந்த வாரம் நாமினேஷன் ஆன நிலையில் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இவருக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த புதிதில் மக்களிடையே அமோக ஆதரவு இருந்தது. ஆனால் பார்வையாளர்கள் அவரிடம் எதிர்பார்த்த எந்த விஷயத்தையுமே அவர் சரியாக செய்யவில்லை. மாயா மற்றும் பூர்ணிமா கூட்டணியில் செட்டிலாகி தான் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொண்டு இருந்தார்.

மிக்சர், சுயமரியாதை இல்லாதவர், முதுகெலும்பு இல்லாதவர் என பலதரப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் சரவண விக்ரம் மீது வைக்கப்பட்டது. அதிலும் கோர்ட் டாஸ்கில் நிக்சனுக்கு பதிலாக மாயா மற்றும் பூர்ணிமா உங்களிடம் உள்ளாடையை காட்டி இருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்ற கேள்விக்கு எனக்கு அது பிரச்சனையே இல்லை என்று சொன்னபோது மிகப்பெரிய வெறுப்பை சம்பாதித்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் ஃபேமிலி ரவுண்டு நடந்தது. அப்போது வீட்டிற்குள் வந்த சரவண விக்ரமின் பெற்றோர் மற்றும் தங்கை மாயா மற்றும் பூர்ணிமா உடன் சேராதே என்று அறிவுறுத்தி இருந்தார்கள். அவர்களுடைய உண்மை முகத்தை குடும்பத்தினர் சொல்லவும் அவர்களிடமிருந்து விலக ஆரம்பித்து இருந்தார் சரவண விக்ரம்.

இருந்தும் பிரயோஜனம் இல்லாமல் இந்த வாரம் சரவணன் விக்ரம் 84 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தும் தன்னுடைய சுயநலத்திற்காக யாரையுமே காயப்படுத்தியது கிடையாது. அதே நேரத்தில் மாயா மற்றும் பூர்ணிமா உடன் சேராமல் இருந்திருந்தால் தன்னுடைய தனித்தன்மையை காட்டி இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

எல்லா சீசனிலும் வெற்றி பெற்றவர்கள் தான் டைட்டில் வின்னர் என அழைக்கப்படுவார்கள். ஆனால் இந்த சீசனில் மட்டும்தான் கடந்த சில வாரங்களாகவே சரவண விக்ரமை விளையாட்டாக டைட்டில் வின்னர் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

சரவண விக்ரம் வெளியேறி இருக்கும் நிலையில் அவருடைய சம்பள விவரம் தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே சீரியல் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்கு 18000 சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 84 நாட்கள் உள்ளே இருந்ததால் அவருக்கு 15 லட்சத்திற்கும் மேலே சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *