நம்ம வத்திக்குச்சி வனிதாவா இது : இப்படி மாறிட்டாங்களே!

நம்ம வத்திக்குச்சி வனிதாவா இது : இப்படி மாறிட்டாங்களே!
  • PublishedApril 22, 2023

நடிகை வனிதா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். என்னதான் தன்னை பற்றிய விமர்சனங்கள் மோசமானதாக இருந்தாலும், அதை எல்லாவற்றையும் அசால்ட்டாக சமாளித்து வருகிறார்.

தற்போது தன்னுடைய இலக்கை நோக்கி பயணிக்கும் அவர்,  தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளும் அவரை தேடி வந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு படத்திற்காக தற்போது அவர் தன்னுடைய லுக்கையே முற்றிலுமாக மாற்றி இருக்கிறார்.

அதாவது வைஜெயந்தி என்னும் போலீஸ் ஆபீஸராக அப்படத்தில் அவர் நடித்து வருவதால் தற்போது தன் தோற்றத்தை மாற்றி இருக்கிறார்.

vanitha-vijaykumar

அந்த வகையில் தன் சோசியல் மீடியா பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கும் போட்டோவை பார்த்த பலரும் வனிதாவா இது என்று ஆச்சரியப்பட்டு போகின்றனர். அந்த அளவுக்கு அதில் ஜீன்ஸ்,  பாப்கட் என ஆளை அடையாளம் தெரியாத அளவுக்கு அவர் மாறிப் போய் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *