“நான் இழந்துவிட்டேன்” நயன்தாராவின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

“நான் இழந்துவிட்டேன்” நயன்தாராவின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
  • PublishedMarch 7, 2024

நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார்.

இந்தச் சூழலில் அவர் இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கு பதிவு ஒன்று பல்வேறு கேள்விகளை ரசிகர்களிடையே எழுப்பியிருக்கிறது.

அவர் துவண்டு போயிருந்த நேரம் கிடைத்த படம்தான் நானும் ரௌடிதான் மற்றும் அறம். இந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகின. குறிப்பாக நயனின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது.

அறம் படம் வெளியானதிலிருந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழிக்கு சொந்தமானார் நயன். அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனையும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் செய்துகொண்ட நயன் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டார். உயிர், உலக் என அவர்களுக்கு பெயர் வைத்திருக்கிறார். திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்டாலே நடிப்புக்கு மூட்டை கட்டும் பெரும்பாலான நடிகைகளுக்கு மத்தியில் நயன்தாரா தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டியிருக்கிறார் அவர்.

இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு அவர் தனது கணவர் விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டதாகவும் விரைவில் இரண்டு பேரும் பிரியவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதில் உண்மை இல்லை என்று ஒருதரப்பினர் கூறினர். மேலும் விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயனின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

அவர் புகைப்படம் பகிர்ந்ததை அடுத்து விக்னேஷ் சிவனும் – நயனும் பிரிவதற்கு வாய்ப்பே இல்லை என்பதைத்தான் அது உணர்த்துவதாக நம்பப்பட்டது. இந்நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில், “உம்ம.. நான் இழந்துவிட்டேன்(umm…i’am lost )” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது இந்தப் பதிவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விக்னேஷ் சிவனை நயன் பிரிவது உறுதியாகிவிட்டதா. அதைத்தான் அவர் மறைமுகமாக இப்படி குறிப்பிடுகிறாரா என்று ரசிகர்கள் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டுவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *