விஜய்யை மெர்சல் செய்த வெங்கட் பிரபு? என்ன நடந்தது தெரியுமா?

விஜய்யை மெர்சல் செய்த வெங்கட் பிரபு? என்ன நடந்தது தெரியுமா?
  • PublishedMarch 7, 2024

விஜய் நடிப்பில் கடைசியாக “லியோ” திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது.

இந்த நிலையில், கோட் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது மும்முரமாக ஷூட்டிங் நடந்து வந்த சூழைல் விஜய் சில நாட்கள் பிரேக் எடுத்தாராம். அப்போது வெங்கட் பிரபுவிடம் அவர், இந்த இடைபட்ட கேப்பில் மற்றவர்களை வைத்து படம் எடுக்கும்படி அறிவுறுத்தினாராம்.

அதனை கேட்டு மற்ற ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து ஷூட்டிங்கை முடித்தாராம். அதனைத் தொடர்ந்து விஜய் இன்னும் சில நாட்கள் பிரேக் கேட்டுவிட்டு, யோகிபாபுவை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்துவிடுங்களேன் என்று கூறினாராம்.

அதற்கு வெங்கட் பிரபுவோ அவரது காட்சிகளையும் எடுத்து முடித்துவிட்டோம் என்று சொன்னாராம். இதை பார்த்த விஜய் இவ்வளவு ஸ்பீடா என்று கேட்டு வெங்கட் பிரபுவை பாராட்டிதள்ளிவிட்டாராம். முன்னதாக இந்தப் படம் ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று தகவல் பரவியது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று வெங்கட் பிரபு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *