ஒரு சில நிமிடங்களுக்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாரா.. எதற்கு தெரியுமா?

ஒரு சில நிமிடங்களுக்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாரா..  எதற்கு தெரியுமா?
  • PublishedMarch 17, 2024

இந்தியாவின் பிரபல முன்னணி நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களை விட ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து செல்லும் விளம்பர படங்களுக்கு கோடிகளில் அதிக சம்பளம் பெறுகின்றனர்.

ஆனால் இவர்கள் வாங்கும் சம்பளத்தை காட்டிலும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அதிக சம்பளம் வாங்குகிறார்.

இந்திய சினிமாவின் அதிக சம்பளம் பெரும் நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. சமீபத்தில் விளம்பரத்தில் நடிக்க 5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். நயன்தாரா டாப் நட்சித்திர நடிகை என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

பார்ட்டைம் மாடலாகவும், டிவி ஆங்க்கராகவும் தனது கெரியரை தொடங்கிய நயன்தாரா. இன்று திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்திற்கு வளர்ந்துள்ளார்.

20 வருடங்களுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் கோலோட்சி வந்த நயன்தாரா ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டிலும் மாஸாக கால்பதித்துள்ளார்.

நயன்தாரா வெள்ளித்திரையையும் தாண்டி தற்போது விளம்பர துறையிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளார். சமீபத்தில் வெளியான தகவலின்படி, டாடா ஸ்கை நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நயன்தாரா, பல மொழிகளில் இரண்டு நாட்கள் எடுக்கப்படும் விளம்பர படத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளமாக பெற்றாராம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த விளம்பரம், இந்தியாவில் உள்ள பல மொழி பார்வையாளர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்துள்ளதாம்.

ஒரு படத்திற்கு ரூ.10 கோடி சம்பளம் வாங்கும் நடிகைகளில் பட்டியலில் நயன்தாரா முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *