குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா… வைரலாகும் படங்கள்

குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா… வைரலாகும் படங்கள்
  • PublishedDecember 26, 2023

தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா கேரளாவில் கிறிஸ்டியன் குடும்பத்தை சேர்ந்தவர்.

இயற்பெயர் தினா மரியம் குரியன். சினிமாவுக்காக நயன்தாரா ஆனார். இந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இருந்தாலும் அடிப்படையில் கிறிஸ்தவ பெண்ணாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று தனது கணவர் விக்னேஷ் சிவன், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தார். இந்த படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“அன்பிலும் பிரார்த்தனைகளிலும் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். கடவுளை நம்புங்கள். அது உங்களை வாழ வைக்கும் மிகப்பெரிய சக்தி” என்று பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் நேற்று வைரலாக பரவியது.

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *