பல பெண்களுடன் லீலை.. சிக்க வைத்த மனைவி.. ஓடி ஒளிந்த நடிகர் ராகுல் ரவி

பல பெண்களுடன் லீலை.. சிக்க வைத்த மனைவி.. ஓடி ஒளிந்த நடிகர் ராகுல் ரவி
  • PublishedDecember 27, 2023

பல பெண்களுடன் தொடர்பில் இருந்து லீலை செய்த சீரியல் நடிகர் ராகுல் ரவி மீது அவரது மனைவி காவல் துறையில் புகார் தெரிவித்தார். ஆனால் ராகுலோ தற்போது எஸ்கேப் ஆகிவிட்டார்.

அவரை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

வெள்ளித்திரையில் நடித்து எப்படி புகழ் பெறுகிறார்களோ அதேபோல்தான் சின்னத்திரையில் நடித்தும் புகழ் அடைகிறார்கள்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ராகுல் ரவி. கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாக கொண்ட அவர் ஆரம்பத்தில் அந்த மாநிலத்தில் மாடலாக இருந்தார். அதன் பிறகு அவருக்கான சின்னத்திரை கதவு திறந்தது.

அதன்படி மலையாளத்தில் வெளியான பொன்னம்பிலி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த சீரியல் பெரிதாக போகவில்லை.

இப்படி இருக்க கடந்த் 2017ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டுவரை தமிழ் மற்றும் கன்னடத்தில் நந்தினி என்ற சீரியல் ஒளிபரப்பாகியது. சன் டிவியில் டெலிகாஸ்ட் ஆன அந்த சீரியலில் அருண் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார்.

அது அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அதேபோல் 2019ஆம் ஆண்டு ஒளிபரப்பான நந்தினி சீரியலின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நந்தினி கொடுத்த அடையாளத்தை அடுத்து தமிழில் அவருக்கு சீரியல் வாய்ப்புகள் வரிசையாக வர ஆரம்பித்திருக்கின்றனர். அதன்படி சாக்லேட், கண்ணாண கண்ணே, அபியும் நானும், கயல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளீலும் சீரியல்களில் நடித்துவருகிறார்.

எனினும், ராகுலுக்கு பெண்கள் விஷயத்தில் வீக்னெஸ் என்று சொல்லப்படுகிறது. இவர் இரண்டு வருடங்களுக்கு பிறகு லட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ராகுலின் மனைவி வங்கியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். ராகுலுக்கு திருமணத்துக்கு பிறகும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பது லட்சுமிக்கு நண்பர்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

இதுகுறித்து லட்சுமியும் ராகுலிடம் பல முறை கேட்டிருக்கிறார். ஆனால் அவரோ திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். இதனால் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் ராகுல் லட்சுமியை தாக்கியதாகவும் ஒரு தகவல் உலாவுகிறது. சூழல் இப்படி இருக்க ராகுலுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதை நிரூபிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார் லட்சுமி.

அதன்படி ராகுல் வசித்த அப்பார்ட்மெண்ட்டுக்கு காவல் துறையினர் மற்றும் அப்பார்ட்மெண்ட்வாசிகளுடன் சென்றிருக்கிறார். அப்போது அங்கு வேறு ஒரு பெண்ணுடன் ராகுல் இருந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து தன்னை தாக்கியது, பல பெண்களுடன் ஆபாசமாக பேசியது உள்ளிட்டவைகளை வைத்து லட்சுமி புகார் கொடுத்ததால் முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர் பதிவு செய்திருக்கின்றனர்.

ஆனால் தான் கைதாவதிலிருந்து தப்பிக்க நினைத்த ராகுல் ரவி இப்போது தலைமறைவு ஆகிவிட்டார். எனவே அவருக்கு லுக் அவுட் நோட்டீஸை காவல் துறை வழங்கியுள்ளது. இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *