“அவங்களுக்கு சொல்ல விரும்புறது…” தனது ஸ்டைலில் சிவகார்த்திகேயன் கொடுத்த பதிலடி

“அவங்களுக்கு சொல்ல விரும்புறது…” தனது ஸ்டைலில் சிவகார்த்திகேயன் கொடுத்த பதிலடி
  • PublishedDecember 27, 2023

அயலான் இசை வெளியீட்டு விழா மற்றும் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டாக நடைபெற்ற அயலான் நிகழ்ச்சியில் கடைசியாக மேடை ஏறி பேசிய சிவகார்த்திகேயனின் பேச்சு இணையத்தில் வழக்கம் போல கசிந்து தீயாக பரவி வருகிறது.

அயலான் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இசையமைப்பாளர் டி. இமான் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டார். குழந்தைகளின் எதிர்காலம் கருதி அதை எல்லாம் வெளியே சொல்ல முடியவில்லை. ஆனால், இந்த ஜென்மத்தில் இனிமேல் அவருடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் எனக் கூறியிருந்தார்.

எனினும், இமானின் முதல் மனைவி எல்லாம் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசியிருந்தார். ஆனால், சிவகார்த்திகேயன் அது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.

பொங்கல் விடுமுறை பெரிய விடுமுறை கேப்டன் மில்லர், லால் சலாம் என எத்தனை படம் வந்தாலும் எல்லா படமும் வெற்றி பெறட்டும் அடிச்சு துவம்சம் பண்ணட்டும் என சிவகார்த்திகேயன் பேச அவரது ரசிகர்கள் விசில் அடித்து தலைவா என கத்த ஆரம்பித்து விட்டனர்.

பல விஷயங்களை பேசி வந்த சிவகார்த்திகேயன் என்னை சிலர் சூப்பர்ன்னு சொல்வாங்க, சில பேரு இன்ஸ்பிரேஷன் சொல்லுவாங்க.. சில பேரு திட்டுவாங்க.. ஆனால், நான் இதையெல்லாம் எடுத்துக்குறதே இல்லை. என் ஹேட்டர்ஸை நான் ஒன்னுமே சொல்ல விரும்பல..

என்னை புடிச்சவங்களுக்காக எப்போதும் போல என் Pathல நான் ஓடிட்டே இருக்கேன் என சிவகார்த்திகேயன் பாசிட்டிவிட்டியோடு தன் பேச்சை முடித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *