23 வருட திருமண வாழ்க்கையை கொச்சைப்படுத்திய நெட்டிசன்கள் : காட்டமாக விமர்சித்த குஷ்பூ

23 வருட திருமண வாழ்க்கையை கொச்சைப்படுத்திய நெட்டிசன்கள் : காட்டமாக விமர்சித்த குஷ்பூ
  • PublishedMay 8, 2023

நடிகை குஷ்பூ கடந்த 2000 ஆம் ஆண்டில் நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அவ்வபோது குஷ்பூவை குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி வருகிறது. அதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு குஷ்பூ, சுந்தர்சியை திருமணம் செய்து கொள்வதற்காக மதம் மாறினார் என்ற தகவல் வைரலாகப் பரவியது.

இதற்கு குஷ்பூ தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக விளக்கமளித்துள்ளார். என்னுடைய திருமணத்தை பற்றி விமர்சிப்பவர்கள் கொஞ்சமாவது அறிவு பெற்றுக் கொள்ளுங்கள்.

அது கொஞ்சம் கூட இல்லாததால் தான் என்னுடைய 23 வருட திருமண வாழ்க்கையை கொச்சைப்படுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் நம் நாட்டில் இருக்கும் சிறப்பு திருமண சட்டம் பற்றி கேள்விப்பட்டதே இல்லை என்று நினைக்கிறேன்.

நான் மதம் மாறவும் இல்லை. அப்படி மாற வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எனது 23 வருட திருமண வாழ்க்கை நம்பிக்கை,  மரியாதை,  சமத்துவம் மற்றும் அன்பின் அடிப்படையில் உறுதியானது.

இதற்கு மேலும் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் தயவு செய்து மலை ஏறவும். உங்களுக்கு இது தேவையா! என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *