இந்த காரணத்தினால் தான் பிரிவு ஏற்பட்டது : விவாகரத்து குறித்து மனம் திறந்த நாசசைத்தன்யா!

இந்த காரணத்தினால் தான் பிரிவு ஏற்பட்டது : விவாகரத்து குறித்து மனம் திறந்த நாசசைத்தன்யா!
  • PublishedMay 8, 2023

நடிகர் நாகசைத்தன்யா, சமந்தாவை பிரிந்தது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். நாகசைத்தன்யா நடிப்பில் உருவாகியுள்ள கஷ்டடி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பேசும் பொழுதுதான் அவர் தன்னுடைய விவாகரத்து குறித்து கருத்து  தெரிவித்துள்ளார்.

சமந்தா மிகவும் இனிய நண்பர்,  அனைத்து விதமான சந்தோஷத்திற்கும் தகுதியானவர் அவர் மீது எனக்கு மிகவும் மரியாதை இருக்கிறது.  எங்கள் பிரிவுக்கும் நான் எப்பொழுதும் மரியாதை தருகிறேன்,  எங்கள் பிரிவுக்கு யாரோ ஒரு மூன்றாவது நபரை காரணம் கூறுவது தவறான விஷயம் என்று கூறி இருக்கிறார்.

மேலும் அவர் மீடியாக்களில் வந்த வதந்திகளால் தான் எங்களுக்குள் முதலில் பிரச்சனை ஏற்பட ஆரம்பித்தது என்றும்,  எங்கள் மீதான மக்களின் பார்வையில் மரியாதை குறைந்ததற்கும் மீடியா தான் காரணம் என்றும் சொல்லி இருக்கிறார்.

விவாகரத்திற்கு பிறகும் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருப்போம் என்று சமந்தா நாக சைதன்யாவிடம் கூறியிருந்ததையும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *