அஜித் படத்திற்கு வந்த புதிய சிக்கல் : இழுப்பறியில் விடாமுயற்சி!

அஜித் படத்திற்கு வந்த புதிய சிக்கல் : இழுப்பறியில் விடாமுயற்சி!
  • PublishedMay 20, 2023

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் யார் என்பது குறித்து அப்டேட்டுகளை தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது படக்குழு திட்டமிட்ட அத்தனை பிளானுக்கும் ஆப்பு வைக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த தகவலின் படி பார்த்தால் அறிவித்த திகதியில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பது சந்தேகம் என்பது போல் தெரிகிறது.

ஏற்கனவே இந்த படம் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட வேண்டிய ஒன்று. எதிர்பாராத சூழ்நிலைகளால் நாட்கள் கடந்து மே மாதத்தில் ஆரம்பிப்பதாக இருந்தது.

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் தான் இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான லைக்காக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருக்கிறது.

இதனால் லைக்கா சம்பந்தப்பட்ட அத்தனை பணப்பரிவர்த்தனைகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டு இருக்கிறது. இதனால் படப்பிடிப்பும் தாமதமாகும் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *