எப்பேர் பட்ட நடிகராக இருந்தாலும், காலுக்கு கீழதான் இருக்கனும் : நடிகர்களை மிரட்டும் பிரபல இயக்குனர்!

எப்பேர் பட்ட நடிகராக இருந்தாலும், காலுக்கு கீழதான் இருக்கனும் : நடிகர்களை மிரட்டும் பிரபல இயக்குனர்!
  • PublishedMay 20, 2023

இயக்கனர்களில் ஒரு தனி பாதையில் பயணிப்பவர் தான் பாலா. இவருடைய படங்களில் நடிப்பதற்கு பல நடிகர்கள் காத்துக்கிடப்பதும் உண்டு. அதேநேரம் இவருடைய படம் என்றாலே தலைதெறிக்க ஓடுபவர்களும் உண்டும். பாலாவின் செயல்பாடுகள் அவ்வாறுதான் இருக்கும்.

அது மட்டுமின்றி எந்த நடிகராய் இருந்தாலும் தனக்கு கீழ்ப்படிந்து தான் இருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அவர் நாற்காலியில் உட்கார்ந்து பேசும்போது மற்றவர்கள் கீழே அமர்ந்து தான் பேச வேண்டும் என்பது போன்ற பல சட்ட திட்டங்கள் அவருக்கு இருக்கிறது. அதனாலேயே இவருடைய படத்தில் நடிப்பதற்கு பலரும் பயந்து நடுங்குவார்கள்

ஏனென்றால் சில சமயங்களில் இவர் கைநீட்டி அடித்து விடுவாராம். அந்த வகையில் பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு கூட பயப்படாத நடிகர்கள் பாலா என்றால் கொஞ்சம் மிரண்டு தான் போகிறார்கள்.

தற்போது வணங்கான் படப்பிடிப்பில் கூட சமுத்திரகனி இவ்வாறு தான் நடந்து கொள்கிறாராம். எப்படி என்றால் பாலா பேசும் போது இவர் கீழே உட்கார்ந்து கைகட்டி பேசி வருகிறாராம்.

இதை யூனிட்டில் இருந்தவர்கள் பார்த்து விட்டு சினிமா நண்பர்களிடம் கூறியிருக்கிறார்கள். அதன் காரணமாகவே இந்த விஷயம் தற்போது திரையுலகில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு சூர்யா நடித்த போது அவரும் இப்படித்தான் இருந்தாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *