யாரும் தவறாக பேசக்கூடாது – வைரலாகும் நைனிக்காவின் காணொலி!

யாரும் தவறாக பேசக்கூடாது – வைரலாகும் நைனிக்காவின் காணொலி!
  • PublishedApril 23, 2023

கண்ணழகி  என அன்போடு அழைக்கப்படுபவர்தான் நடிகை மீனா.  சினிமா துறையில் 40 ஆண்டுகளை கடந்துள்ள மீனாவிற்கு சமீபத்தில் மீனா 40′ என விழா எடுத்து பல பிரபலங்கள் சேர்ந்து கொண்டாடினார்கள்.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  சரத்குமார், போனி கபூர்,  பிரசன்னா, குஷ்பூ,  ரோஜா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

அப்போது மீனாவின் மகள் நைனிகா தன்னுடைய அம்மாவை ஊடகங்களில் தவறாக பேசுவது குறித்து ஆக்கிரோசமாக பேசியுள்ளார். அந்த காணொலி நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

நைனிகா பேசும்போது,  ஒரு பெண்ணாக சினிமாவில் 40 ஆண்டுகள் இருப்பது சாதாரண விஷயமல்ல. தனது அம்மா குழந்தை நட்சத்திரமாகவும் ஹீரோயினாகவும் நடித்து சாதித்துள்ளார்.

அவர் நடிகையாக இருப்பதால் இஷ்டத்திற்கு பேசி விடுகிறார்கள். சில ஊடகங்களில் அம்மாவை பற்றி தவறாக பேசுகிறார்கள். தயவு செய்து இப்படி பேச வேண்டாம். அவர் நடிகையாக இருந்தாலும் அவரும் ஒரு ஹியூமன் தான்.

Twin angels - Actress Meena and daughter Nainika's latest viral photos - Tamil News - IndiaGlitz.com

அப்பா இறந்தபோது அம்மா தனியாக அழுவார்கள். எனக்கு தெரியாமல் அழுது கொண்டே இருப்பார்கள். அதை நான் பார்த்து என்னால் என்ன சொல்வது என்று கூட எனக்கு தெரியாது.

அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு தற்போது தான் ஓரளவுக்கு நன்றாக இருந்து வருகிறார்கள். யாரும் என் அம்மாவை தவறாக பேச வேண்டாம் ப்ளீஸ். நான் அம்மாவிடம் பயப்பட வேண்டாம் அம்மாஇ நான் இருக்கிறேன். நான் உங்களை பார்த்துக்கொள்கிறேன்.

என்னால் இப்போது முடியவில்லை என்றாலும் வளர்ந்து உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன் என்று மீனாவிடம் நைனிகா உருக்கமாக வீடியோவின் மூலம் கூறியுள்ளார். இந்த காணொலி கலா மாஸ்டரால் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த காணொலி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *