எம்.ஜி.ஆரிடம் இருந்து பரிசு பெற்ற ஒரே ஒரு நடிகர் : 40 வருடங்களுக்கு பிறகு கசிந்த உண்மை!

எம்.ஜி.ஆரிடம் இருந்து பரிசு பெற்ற ஒரே ஒரு நடிகர் : 40 வருடங்களுக்கு பிறகு கசிந்த உண்மை!
  • PublishedJune 1, 2023

சினிமாவிலும் அரசியலிலும் தனி முத்திரை பதித்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு பல பேரை சினிமாவில் வளர்த்து விட்ட பெருமை இவருக்கு உண்டு.

இப்படி மற்றவர்களுக்காக உதவி செய்ய அவர் பயன்படுத்திய பொருட்களை மற்றவருக்கு கொடுப்பதில் சிறிது தயக்கம் காட்டுவார். ஒரு போதும் அதை மட்டும் செய்ய மாட்டார்.

ஆனால் அவரிடம் இருந்தே அவர் பயன்படுத்திய பொருளை பிரபல நடிகர் ஒருவர் வாங்கி இருக்கிறார். அது வேறு யாருமில்லை எம்ஜிஆர் நடிப்பை பின்பற்றும் சத்யராஜ் தான். எம்ஜிஆர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டுபவர்,  அதே போல் தான் சத்யராஜும்.

 

கதாநாயகன்,  வில்லன் என 80 மற்றும் 90களில் ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த சத்யராஜின் நடிப்பை எம்ஜிஆர் பலமுறை பாராட்டி இருக்கிறார். மறைமுகமாக அவருடைய வளர்ச்சிக்கு சத்யராஜ் உறுதுணையாக இருந்திருக்கிறார்.

இதனால் சத்யராஜின் நடிப்புத் திறனை பாராட்டும் விதமாக அவருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தார். அதற்கேற்றார் போல் அவருக்கும் எம்ஜிஆர் பயன்படுத்திய கரலாக்கட்டை மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இதை எம்ஜிஆர் எப்படியோ தெரிந்து கொண்டு  சத்யராஜ் விரும்பிய அந்த கரலாக்கட்டையே அவருக்கு பரிசாக அளித்து விட்டார். இதை சத்யராஜ் ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போது அவ்வளவு பூரிப்புடன் இருப்பாராம். அதை இன்று வரை பயன்படுத்தி வருகிறார் சத்யராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *