மீண்டும் ஒரு காதலா : வனிதாவின் பதிலால் ஏற்பட்ட சர்ச்சை!

மீண்டும் ஒரு காதலா : வனிதாவின் பதிலால் ஏற்பட்ட சர்ச்சை!
  • PublishedJune 1, 2023

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இவர் சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார்.

அதிலும் இவர் பீட்டர் பாலை திருமணம் செய்து, பின் அவரது சுயரூபம் தெரிந்ததும் அவரை விரட்டியடித்தது சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் பீட்டர் பால் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கு வனிதா எந்த இரங்கலும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் திருப்பதி சென்று சாமி தரிசனம் பெற்றுள்ளார் வனிதா விஜயகுமார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது ஆண்டவன் அருளால் எனக்கு திரும்பவும் யார் மீது வேண்டுமானாலும் காதல் ஏற்படலாம் என புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி அப்படி நடந்தால் என் வாழ்க்கையில் சரியான முடிவை எடுப்பேன் எனவும் கூறியுள்ளார். பீட்டர் பால் இறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் 4வது காதலா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *