அரசியலில் கால் பதிக்கும் விஜய் : ராஜதந்திரங்கள் செல்லுபடியாகுமா?

  • PublishedJune 1, 2023

விஜய் ஒரு காலகட்டத்தில் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வந்தார். அதை இப்போது இரண்டாக மாற்றிக் கொண்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் தற்சமயம் விஜய்க்கு ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் இரண்டு படங்கள் என்றால் வருடத்திற்கு 400 கோடி வரை சம்பளம் பெறுகிறார். ஆனால் இப்போது மொத்தமாக சினிமாவை விட்டு அரசியலுக்கு வர இருக்கிறார்.

Vijay: விஜய் வீட்டு வாசலில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்: விமர்சனங்களுக்கு தக்க  பதிலடியா.? - actor vijay house pictures goes to viral - Samayam Tamil

இது விஜய் போடும் தப்பு கணக்கு என்று பலர் கூறுகின்றனர். ஏனென்றால் நடிகர்  விஜயகாந்த் இவ்வாறு அரசியலில் இறங்கி தோற்றுப் போனார்.

அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கினார். அவரின் மனதில் அழுத்தமாக அடுத்த முதல்வர் நான் தான் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அரசியல் என்பது வேறு என்பதை நாளடைவில் கமல் புரிந்து கொண்டார்.

இவ்வாறு அரசியலில் வெறுத்துப் போன நடிகர்கள் உள்ள நிலையில் விஜய் துணிச்சலாக இந்த முடிவை எடுத்துள்ளார். இது நிச்சயமாக அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பலரும் கூறுகிறார்கள். இதில் விஜய்யின் வியூகம் அவருக்கு மட்டுமே தெரியும். ஆகையால் அவர் எப்படி அரசியலை கையாள்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *