18 வருடங்களுக்கு பிறகு தனுஷின் படம் ரீ-ரிலீஸ்

கடந்த 2007ம் ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், திவ்யா ஸ்பந்தனா, கிஷோர், டேனியல் பாலாஜி ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் ‘பொல்லாதவன்’.ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.
இப்படம் வெளிவந்த காலகட்டத்தில் தனுஷுக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற பைக் பிஜிஎம் இன்றும் பல பைக்களில் ஒலிக்கிறது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு பொல்லாதவன் படம் இவ்வருடம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே தனுஷின் 3, மயக்கம் என்ன, புதுப்பேட்டை போன்ற படங்கள் கடந்த வருடங்களில் ரீ-ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.