பொங்கலன்று தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் டிவி செனல்கள்….

பொங்கலன்று தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் டிவி செனல்கள்….
  • PublishedJanuary 9, 2024

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதையொட்டி டிவி செனல்களில் புத்தம் புதிய படங்களை இறக்குகின்றனர்.

விஜய் டிவியில் வருகிற ஜனவரி 14-ந் தேதி போகிப் பண்டிகையன்று பிற்பகல் 3 மணிக்கு சரத்குமார் நடித்த பரம்பொருள் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இதையடுத்து ஜனவரி 15-ந் தேதி பொங்கல் பண்டிகையன்று காலை 11.30 மணிக்கு யோகிபாபுவின் லக்கி மேன், மாலை 5.30 மணிக்கு உதயநிதியின் மாமன்னன், இரவு 9 மணிக்கு போர் தொழில் ஆகிய படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. ஜனவரி 16-ந் தேதி மாலை 5.30 மணிக்கு பிச்சைக்காரன் 2 மற்றும் இரவு 9 மணிக்கு குட் நைட் ஆகிய படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன.

சன் டிவியில் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது. இப்படத்தை வருகிற ஜனவரி 15-ந் தேதி பொங்கல் பண்டிகையன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வந்து வெற்றி பெற்ற ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ஜனவரி 16-ந் தேதி ஒளிபரப்பப்பட உள்ளது.

கலைஞர் டிவியில் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக வருகிற ஜனவரி 15-ந் தேதி அருள்நிதி நடித்த கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் மாட்டுப்பொங்கல் தினத்தன்று ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இறைவன் திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

ஜீ தமிழியில் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக வருகிற ஜனவரி 14-ந் தேதி ஷாருக்கான், நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் ஜனவரி 15-ந் தேதி விஷால், எஸ்.ஜே.சூர்யாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான மார்க் ஆண்டனியும், ஜனவரி 16-ந் தேதி ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்த வீரன் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *