“வந்து கொண்டிருக்கிறேன் ராவணா” வெளியானது ‘ஆதிபுருஷ்’ ட்ரைலர்…. அட்டகாசம்!!

“வந்து கொண்டிருக்கிறேன் ராவணா” வெளியானது ‘ஆதிபுருஷ்’ ட்ரைலர்…. அட்டகாசம்!!
  • PublishedJune 7, 2023

ஓம் ராவத் இயக்கத்தில், பூஷன் குமார் தயாரிப்பில், பிரபாஸ், ராகவனான (ராமர்) நடித்துள்ள திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை தழுவி திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மிக பிரமாண்ட பட்ஜட்டில், 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 16 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால், படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக… இப்படத்தின் ப்ரீ -ரிலீஸ் ஈவென்ட் இன்று திருப்பத்தில் நடந்தது.

திருப்பதியில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரபாஸ், கிருத்தி சனோன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருமே கலந்து கொண்டனர்.

மேலும் தெலுங்கு திரையுலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் நடுவே, ‘ஆதிபுருஷ்’ படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட்டது.

மஹாபாரத கதையின் ஒவ்வொரு காட்சிகளையும், தத்ரூபமாக 3டி-யில் படமாக்கியுள்ளது படக்குழு. மேலும் ராகவனாக நடித்துள்ள பிரபாஸ் பேசும் வசனங்களும் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் விதத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *