இருந்தாலும் விஜய்க்கு இவ்வளோ இருக்க கூடாது….. நண்பர் கூறிய இரகசியம்

இருந்தாலும் விஜய்க்கு இவ்வளோ இருக்க கூடாது….. நண்பர் கூறிய இரகசியம்
  • PublishedJune 7, 2023

நண்பர்களுக்கு எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விஜய், தனது நீண்டகால நண்பருடன் சண்டை போட்டது குறித்து தெரியவந்துள்ளது.

மேலும், விஜய் ஏன் சண்டை போட்டார் என்பது பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக மாஸ் காட்டி வருகிறார் விஜய். கடந்த 10 ஆண்டுகளில் விஜய்யின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொது நிகழ்ச்சிகளில் பார்ப்பதற்கு சைலண்டாக இருக்கும் விஜய், அவரது நண்பர்களுடன் இணைந்துவிட்டால் எல்லோரையும் கலாய்த்து தள்ளிவிடுவாராம்.

அதேபோல், விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் யார் யார் என பலருக்கும் தெரியாது. விஜய்யின் கேங்கை பொது இடங்களில் கும்பலாக பார்ப்பது ரொம்பவே கடினம். அதேநேரம் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் விஜய்யை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என சொல்லப்படுவதுண்டு. அந்தளவிற்கு நண்பர்கள் மீது ரொம்பவே மரியாதை வைத்திருப்பாராம்.

அப்படி விஜய்யின் நட்பு பட்டியலில் நிறையபேர் இருந்தாலும், சீரியல் நடிகர் சஞ்சீவை யாருக்கும் தெரியாமல் இருக்காது. மெட்டி ஒலி, அண்ணாமலை, ஆனந்தம், திருமதி செல்வம், சித்தி 2 உட்பட ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சஞ்சீவ். அதேபோல், நிலாவே வா, பத்ரி, புதிய கீதை, மாஸ்டர் என விஜய்யுடன் இணைந்து திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தனது மிகநெருங்கிய நண்பர்களில் ஒருவரான சஞ்சீவ் உடன் கோபத்தில் பேசாமல் இருந்துள்ளார் விஜய். “அவருக்கு என்னப்பா சீரியல் சூப்பர் ஸ்டார்” என சஞ்சீவை ஒரு நிகழ்ச்சியில் வைத்து பாராட்டியிருந்தார் விஜய்.

இந்நிலையில், விஜய்யையும் அவரது நண்பர்களையும் வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்துவதற்காக பிரபல சேனல் ஒன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

அப்போது சஞ்சீவ் ஒரேநேரத்தில் பல சீரியல்களில் பிஸியாக நடித்து வந்துள்ளார். அதனால், விஜய்யின் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது கஷ்டம் எனக் கூறியுள்ளாராம். அதனை கேள்விப்பட்ட விஜய், சஞ்சீவ் உடன் 6 மாதங்கள் வரை பேசாமல் இருந்துள்ளார். இத்தனைக்கும் இருவரது வீடுமே அடுத்தடுத்து தான் இருக்கின்றன. ஆனால், விஜய் சஞ்சீவை பார்க்கவோ பேசவோ இல்லையாம்.

அதன்பின்னர் ஒருமுறை இன்னொரு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துக்கொண்டதாகவும், அப்போதுதான் விஜய் அவரிடம் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. என்னதான் கோபத்தில் சண்டை போட்டாலும் நண்பர்களை பார்த்ததும் அதையெல்லாம் மனதில் வைக்காமல் ஜாலியாக பேசிவிடுவாராம் விஜய். இதனை சீரியல் நடிகர் சஞ்சீவ் தான் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *