மரண அடி வாங்கிய ஆதிபுருஷ்!! 2-ம் நாள் வசூல் எவ்வளோ தெரியுமா?

மரண அடி வாங்கிய ஆதிபுருஷ்!! 2-ம் நாள் வசூல் எவ்வளோ தெரியுமா?
  • PublishedJune 18, 2023

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருந்த இப்படம் கடந்த ஜூன் 16-ந் தேதி திரைக்கு வந்தது.

ஆதிபுருஷ் படம் வெளியாகும் திரையரங்குகளில் ஒரு சீட் மட்டும் அனுமனுக்காக ஒதுக்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அப்படி அனுமனுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையை மலரால் அலங்கரித்து அதற்கு திரையரங்கில் ரசிகர்கள் பூஜை செய்த நிகழ்வுகளும் அரங்கேறின.

இப்படி பெரும் அலப்பறைக்கு மத்தியில் ரிலீஸ் ஆன ஆதிபுருஷ் திரைப்படம் விமர்சன ரீதியாக கடும் சறுக்கலை சந்தித்தது. முதல் காட்சி முடிந்ததும் இப்படத்திற்கு அதிகளவில் நெகடிவ் விமர்சனங்கள் குவிந்தன.

இதுதவிர ஆதிபுருஷ் படக்குழு நெகடிவ் விமர்சனங்களை நீக்க நெட்டிசன்களிடம் ஆயிரக்கணக்கில் பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இப்படி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவர்களால் நெகடிவ் விமர்சனங்களை தடுக்க முடியவில்லை. இது ஒருபுறம் இருக்கும் இப்படத்தின் முதல் நாள் வசூல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அதன்படி இப்படம் முதல்நாளில் ரூ.140 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. ரிலீசுக்கு முன்பே அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டதால் இந்த அளவு வசூல் ஈட்டி இருந்தது. முதல் நாள் வந்த நெகடிவ் விமர்சனங்கள் காரணமாக ஆதிபுருஷ் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் பயங்கர் அடி வாங்கி உள்ளது.

முதல் நாளைவிட 50 சதவீதம் குறைவு, அதாவது இரண்டாம் நாளில் இப்படம் வெறும் ரூ.65 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதனால் இப்படம் படுதோல்வியை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *