அக்கவுண்டில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிய பாலா!!! என்ன நடந்தது??

அக்கவுண்டில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிய பாலா!!! என்ன நடந்தது??
  • PublishedJune 18, 2023

பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளவர் பாவா லட்சுமணன். குறிப்பாக மாயி, அரசு, ஆனந்தம், எதிர்நீச்சல் போன்ற படங்களில் இவர் நடித்த காமெடி காட்சிகள் வேறலெவலில் ஹிட் அடித்தன.

சமீப காலமாக படங்கள் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்த நடிகர் பாவா லட்சுமணன் சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். நோய் தீவிரமானதை அடுத்து அவரது கால் கட்டை விரலும் அகற்றப்பட்டது.

இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற போதுமான பண வசதி இல்லாததால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபத்திய பேட்டியில் தன்னிடம் சுகர் மாத்திரை வாங்க கூட காசில்லை எனக்கூறி கண்கலங்கினார் பாவா லட்சுமணன். அவரின் இந்த வீடியோ வைரலானதை அடுத்து அவருக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா உதவிக்கரம் நீட்டி உள்ளார். மருத்துவமனைக்கு சென்று பாவா லட்சுமணனை நேரில் சந்தித்த பாலா, அவரிடம் ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்து உதவியதோடு, அவரிடம் சிறிது நேரம் கலந்துரையாடினார். பாவா லட்சுமணனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பாலா, தனக்கே உரித்தான ரைமிங் காமெடிகளை பேசி பாவா லட்சுமணனை சிரிக்க வைத்தார்.

பாவா லட்சுமணனை பாலா சந்தித்தபோது எடுத்த வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது அக்கவுண்ட்டில் மொத்தமே 32 ஆயிரம் தான் இருந்ததாகவும், அவற்றை மொத்தமாக எடுத்துக்கொண்டு 2 ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு உங்களை பார்க்க வந்து இந்த 30 ஆயிரத்தை கொடுத்துள்ளதாக பாலா தெரிவித்துள்ளார்.

மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை அழைக்குமாறும் பாலா கூறியதை கேட்டு பாவா லட்சுமணன் நெகிழ்ச்சி அடைந்தார். பாலாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *