நேபாளத்திலும் சிக்கலை சந்தித்த ஆதிபுருஷ் திரைப்படம்!

நேபாளத்திலும் சிக்கலை சந்தித்த ஆதிபுருஷ் திரைப்படம்!
  • PublishedJune 18, 2023

பாகுபலி’ புகழ் பிரபாஸ் நடித்த ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

அதில் கிருத்தி சனோன் நடித்திருந்த சீதா கதாபாத்திரத்தை குறிப்பிட்டு ‘சீதா இந்தியாவின் மகள்’ என குறிப்பிட்டு இருந்தது. இந்த விடயம் நேபாளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீதா தேவியின் பிறந்த இடம் குறித்து தவறாக திரைப்படம் காட்டுவதாக எழுந்த பிரச்சினையை அடுத்து இந்த வசனத்தை அகற்ற படத்தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டது.

அதன் பிறகே அந்நாட்டு சென்சார் போர்டு அனுமதி அளித்துள்ளது. எனினும்  சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக அந்நாட்டில் ஆதிபுருஷ் திரைப்படத்தை திரையிடுவது நிறுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *