கேரளாவில் விஜய்க்கு அதிக மவுசு… வாயடைத்துப் போன பிரபலம்

கேரளாவில் விஜய்க்கு அதிக மவுசு… வாயடைத்துப் போன பிரபலம்
  • PublishedMarch 19, 2024

மலையாள படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் தொடர்ந்து கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இப்போது மஞ்சுமல் பாய்ஸ் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 40 கோடி வசூல் செய்துள்ளது.

அதோடு உலகம் முழுவதும் 200 கோடி வசூலை ஈட்டி மலையாள சினிமாவில் சாதனை படைத்திருக்கிறது. ஆனால் சமீபகாலமாக தமிழ்நாட்டில் தமிழ் படங்கள் பெரிய அளவில் கவனம் இருக்கவில்லை.

இந்நிலையில் பிரித்விராஜ் இப்போது ஆடுஜிவீதம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாக உள்ள நிலையில் இதற்கான பிரமோஷனனை தீவிரம் செய்து வருகிறார்.

அப்போது தமிழ்நாட்டில் மஞ்சுமல் பாய்ஸ் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரித்விராஜ் தமிழ்நாட்டில் மலையாள படங்கள் வெற்றி பெறுவது உங்களுக்கு புதிதாக இருக்கலாம்.

ஆனால் கேரளாவில் பல தமிழ் படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. குறிப்பாக விஜய்யின் படங்களுக்கு அங்கு அதிக மவுசு இருந்து வருகிறது. கடைசியாக வெளியான லியோ படத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் சாதாரண ரசிகர்கள் டிக்கெட் கிடைக்கவில்லை.

அந்த அளவுக்கு விஜய்யின் படங்கள் மாபெரும் வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கும் விஜய் இப்போது ஒரு முடிவு எடுத்திருக்கிறார். சினிமாவை விட்டுவிட்டால் தனது விருப்பத்தை நோக்கி பயணிக்க இருக்கிறார்.

அவரது நம்பிக்கைக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். மேலும் நான் விஜய் படத்தை இயக்கினால் டார்க் அண்ட் கிரிட்டி ஆக்சன் போன்ற படத்தை எடுக்க விரும்புவதாக பிரித்விராஜ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *