மகளுக்காக தொழிலை விட தயாராகும் பிரியங்கா சோப்ரா!

மகளுக்காக தொழிலை விட தயாராகும் பிரியங்கா சோப்ரா!
  • PublishedMay 12, 2023

பிரபல பொலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தன்னுடைய மகளுக்கு தொழிலை தியாகம் செய்ய நினைப்பதாக கூறியுள்ளார்.

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் ஆகியோர் கடந்த 2022 ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்தனர். அவருக்கு தற்போது ஒருவயதாகுகிறது. அத்துடன், மால்திக் என பெயர் வைத்துள்ளார்கள்.

இந்நிலையில், தன்னுடைய ஒரு வயது மகளுக்காக தொழிலை தியாகம் செய்ய நினைப்பதாக பிரியங்கா சோப்ரா நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். அதேநேரம் பிரியங்கா சோப்ராவிற்காக அவருடைய பெற்றோர் செய்த தியாகங்களையும் அவர் நினைவுக்கூர்ந்துள்ளார்.

ஃபெமினா மிஸ் இந்தியாவுடன் பேசும் போது, பிரியங்கா சோப்ரா தனது பெற்றோர் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்தார், மேலும் அவர்கள் எப்படி எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவருக்காக மும்பை சென்றார்கள்.

பரேலியில் தனிப்பட்ட பயிற்சியைத் தொடங்கியபோது தனக்கு 17 வயது என்று கூறிய அவர், அங்கு ஒரு மருத்துவமனையை நிறுவியதாகவும், தெரிவித்தார். பெற்றோர் அப்போது அவர்கள் செய்தவற்றை நான் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. உண்மையில் அது அவர்களின் கடமை என்றே நினைத்தேன்.

ஆனால் தற்போது எனக்கு நாற்பது வயதாகுகிறது. இப்பொழுதுதான் அது எனக்கு புரிகிறது.  என் மகள் வேறு ஒரு நாட்டிற்கு செல்லலாம் என்று கேட்டால் உண்மையில் என் மகளுக்காக நான் நிபந்தனைகள் இன்றி அதை செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/Cq1FN2xttG9/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *