இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு மனநல பரிசோதனை.. உயர்நீதிமன்றத்தில் பரபர மனு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு மனநல பரிசோதனை.. உயர்நீதிமன்றத்தில் பரபர மனு!
  • PublishedJanuary 3, 2024

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பரபரப்பான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி திரைப்படங்களை எடுத்தார். அதன்பிறகு நடிகர் விஜயுடன் மாஸ்டர், கமல்ஹாசனுடன் விக்ரம், மீண்டும் விஜயுடன் லியோ உள்ளிட்ட படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார்.

இந்நிலையில் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு எதிராக மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்நத ராஜா முருகன் என்பவர் மதுரை உயர்நீதின்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கும் திரைப்படங்களில் சட்டவிரோத செயல்கள், வாகனங்களில் அதிவேகமாக செல்வது, கலவரம், போதைப்பொருள் பயன்பாடு, காவல் துறை உதவியுடன் எந்த வகையான குற்றங்களையும் செய்யலாம் என்பது போன்ற காட்சிகள் மூலம் சமூகத்துக்கு தவறான வழிக்காட்டுதல்களை வழங்கி வருகிறார்.

இதுபோன்ற திரைப்படங்களை காட்சிகளை தணிக்கை குழு முறையாக பரிசோதிக்க வேண்டும்.அவருக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

லோகேஷ் கனகராஜ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில் தான் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

lok

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *