OTTக்கு வருகின்றதா புஷ்பா 2 ; எப்ப, எதுலனு தெரியுமா?
அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2: தி ரூல்’ பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்திய சினிமா வரலாற்றில் எந்த ஒரு படமும் இவ்வளவு குறுகிய நாட்களில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வணிக ரீதியாக வசூல் செய்ததில்லை, என்கிற பெருமையை ‘புஷ்பா 2’ திரைப்படம் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், ‘புஷ்பா 2’ OTTயில் வெளியாகவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
அதன்படி, ஜனவரி இரண்டாவது வாரத்தில் இருந்து ‘புஷ்பா 2’ ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் இதனை மறுக்கும் விதமாக, ‘புஷ்பா 2’வைப் ரசிகர்கள் விடுமுறை நாட்களில் தியேட்டரில் பார்த்து கொண்டாடும்படி கூறியது. ஆனால் தற்போது OTT -க்கு ‘புஷ்பா’ தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, தாப்ரோது கிடைத்துள்ள தகவலின்படி, Netflix OTT நிறுவனம் தான் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ₹250 கோடிக்கு வாங்கியுள்ளதாம். OTT நிர்வாகம் , தங்கள் முதலீட்டை மீட்டெடுக்க, படத்தை விரைவில் ஸ்ட்ரீமிங் செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது. எனவே இந்த மாத இறுதியில், புஷ்பா 2 Netflixல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம். இந்த தகவல் ஓடிடி ரசிகர்களையும், மீண்டும் ஒருமுறை புஷ்பா 2 படத்தை பார்க்க காத்திருக்கும் அல்லு அர்ஜுன் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்னும் சில ஊடகங்களில், ஜனவரி 31 ஆம் தேதி Netflixல் புஷ்பா 2 வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அடுத்த இரண்டு வாரங்களில் இப்படம் செய்யும் வசூலை பொறுத்து ஓடிடி வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.