புஷ்பா 3 படம் தொடர்பான அறிவிப்பு…

தெலுங்கு சினிமாவில் மிகவும் ஹிட்டான படங்களில், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மாஸ் காட்டிய படங்களில் ஒன்று அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா.
முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் வெளியாகி அதுவும் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி இருந்தது. கடந்த 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா தி ரூல் ரூ. 400 கோடி வரை வசூல் செய்து நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த வருடம் 2024, நவம்பர் மாதம் புஷ்பா தி ரைஸ் (புஷ்பா 2) வெளியானது. 2ம் பாகம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
புஷ்பா 3 படம் தொடர்பான அறிவிப்பை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ரவிசங்கர் வெளியிட்டுள்ளார்.
புஷ்பா 3 படத்திற்கான பணிகள் வருகிற 2028ல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு இடையில் அட்லீ மற்றும் திரிவிக்ரம் படங்களை அல்லு அர்ஜுன் முடிக்க உள்ளாராம்.