அந்தரங்க போட்டோவை காட்டி மிரட்டிய புஷ்பா பட நடிகர்.. ரவுண்டு கட்டிய போலீஸ்

அந்தரங்க போட்டோவை காட்டி மிரட்டிய புஷ்பா பட நடிகர்..  ரவுண்டு கட்டிய போலீஸ்
  • PublishedDecember 8, 2023

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா படம் வெளிவந்தது. மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற அப்படம் 370 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டி இருந்தது. அதை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமும் உருவாகிக் கொண்டிருக்கிறது.

அடுத்த வருடம் இப்படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் நடித்திருக்கும் பிரபலம் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கும் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி புஷ்பா படத்தில் ஹீரோவின் நண்பராக நடித்திருப்பார்.

இன்னும் சொல்லப்போனால் மொத்த கதையையும் அவர் விவரிப்பது போல் தான் உருவாக்கப்பட்டிருக்கும். அதனாலேயே இப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவர் துணை நடிகை ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். சில பிரச்சனைகளின் காரணமாக அந்த துணை நடிகை இவரை விட்டு பிரிந்திருக்கிறார். அதை தொடர்ந்து வேறு ஒருவருடன் அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இதை தாங்க முடியாத ஜெகதீஷ் துணை நடிகை வேறு ஒருவருடன் அந்தரங்கமாக இருப்பதை தன் செல்போனில் போட்டோ எடுத்திருக்கிறார். அதை காட்டி மிரட்டவும் செய்திருக்கிறார். இந்த மன உளைச்சல் தாங்க முடியாத அந்த துணை நடிகை சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் இப்போது ஜெகதீஷ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இது மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அவர் தரப்பிலிருந்து எந்தவிதமான அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை. ஆனாலும் அந்தரங்க போட்டோவை காட்டி ஒரு பெண்ணை தற்கொலைக்கு இவர் தூண்டியது இப்போது சலசலப்பாக மாறி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *