ஷகிலா போல இருப்பான்னு நினைச்சேன்.. ஆனால்? ஷீத்தல் குறித்து பப்லு பகீர்

ஷகிலா போல இருப்பான்னு நினைச்சேன்.. ஆனால்? ஷீத்தல் குறித்து பப்லு பகீர்
  • PublishedDecember 8, 2023

நடிகர் பப்லு அவருடைய காதலி ஷீத்தலை பிரிந்து விட்டார் என்று இணையத்தில் செய்தி பரவி வரும் நிலையில் அது குறித்து பப்லுவிடம் நடிகை ஷகீலா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அப்போது பப்லு நான் எல்லாரும் ஷகீலா மாதிரி பெரிய மனசோடு இருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா அப்படி இல்லை என்று பேசி இருக்கிறார்.

பப்லு மற்றும் ஷகீலா பேசிய வீடியோ பற்றி பார்க்கலாம்…..

இத்தனை நாட்களாக பப்லு மற்றும் ஷீத்தல் இருவரும் சந்தோஷமாக பல வீடியோக்களும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்த நிலையில் எதனால் இவர்கள் இருவரும் பிரிந்தார்கள் என்ற விவாதம் தான் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் பேசும் பொருளாக இருக்கிறது.

இது குறித்து பப்லு பிரித்விராஜ் மட்டும் சில செய்தி சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அதில் இது என்னுடைய தனிப்பட்ட விஷயம். அதை பற்றி நான் இப்போது வெளியில் பேசியது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது புரிந்து கொண்டிருக்கிறேன். நிச்சயமாக இனி இப்படி செய்ய மாட்டேன் என்று பேசி இருக்கிறார்.

இந்த நிலையில் ஷகீலா பப்லு பிரித்விராஜ் இடம் ஒரு பேட்டி ஒன்றை எடுத்து இருக்கிறார். அதில் நீங்கள் தான் முதலில் உங்களுடைய தனிப்பட்ட ரகசியமான விஷயங்களை பொது பொதுவெளியில் போட்டு உடைத்தீர்கள்.

எனக்கு வயதாகிறது. அதனால் எனக்கு உடல் ரீதியான தேவை இருக்கிறது என ரகசியமான விஷயங்களை பொதுவெளியில் பேசினீர்கள். அப்போது நீங்கள் இப்படி பேசியதன் காரணமாகத்தான் தற்போது நீங்கள் இருவரும் தனித்திருக்கிறீர்களா? என்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். நீங்கள் அப்போது பேசாமல் இருந்திருந்தால் இப்போது இந்த கேள்வியை உங்களிடம் யாரும் கேட்டிருக்க மாட்டார்கள் என்று ஷகிலா கூறியிருக்கிறார்.

இதற்கு பப்லு நான் அனைவரையும் நம்பி விட்டேன். எல்லாருக்கும் மனசு ஷகீலா போல பெருசா இருக்குன்னு நம்பிட்டேன். ஆனா அவரவர்கள் அவர்களுடைய எல்லையில் தான் சிந்திக்கிறார்கள். இப்போது தான் அதை புரிந்து கொண்டிருக்கிறேன்.

என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை பொதுவெளியில் பேசியது மிகப்பெரிய தவறு. நான் ஷகீலா என்ற தனிமனிதரிடம் என்னுடைய தனிப்பட்ட முறையில் எவ்வளவு விஷயங்களை பேச முடியும் அதை எல்லாம் பொது வெளியில் பேசக்கூடாது என்பதை புரிந்து கொண்டிருக்கிறேன்.

ஆனால் உங்களுக்கு பெரிய மனது இருக்கிறது. அதுபோல எல்லோருக்கும் அப்படி இருக்கிறதா? என்றால் இல்லை.

v

எனவே இனிமேல் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் விவாதிக்க போவது கிடையாது. யார் என்ன வேண்டும் என்றாலும் சொல்லிக் கொண்டு போகட்டும். நான் என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை பொதுவெளியில் இனி பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று உறுதியாக பேசி இருக்கிறார்.

கடைசி வரைக்கும் ஷகீலாவிடம் தான் எதற்காக ஷீத்தலை பிரிந்து இருக்கிறேன் என்பதை பற்றி சொல்லவே இல்லை. நீங்களும் ஷீத்தலும் பிரிந்து இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு ஆமாம் என்றும் சொல்லாமல் இல்லை என்றும் சொல்லாமல் நழுவலாக அந்த பேட்டியை முடித்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *