பிளாஸ்டிக் சர்ஜரியா? இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகை ரைசா வில்சனின் Hot போட்டோ சூட்….

பிளாஸ்டிக் சர்ஜரியா? இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகை ரைசா வில்சனின் Hot போட்டோ சூட்….
  • PublishedJanuary 31, 2024

பிரபல நடிகை ரைசா வில்சன், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா என்கிற சந்தேகத்தை தூண்டும் விதத்தில் அவர் அண்மையில் நடத்தியுள்ள புதிய போட்டோ ஷூட் அமைந்துள்ளது.

பல விளம்பர படங்களில் மாடலாக நடித்து பிரபலமான ரைசா வில்சன், பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, பிரபலமானார்.

மிகவும் மார்டர்ன் ஆன பெண்ணாக இருந்தாலும், பிக்பாஸ் வீட்டில் தனக்கென ஒரு தனி வட்டம் அமைத்து கொண்டு விளையாடினார்.

பல விஷயங்களை இவர் கண்டும்… காணாதது போல் விளையாடியது இவருக்கே பாதகமாக மாறி, மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாமல் வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே, ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஹீரோயினாக மாறினார்.

நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக, ‘பியார் பிரேமா காதல்’ என்கிற காதல் படத்தில் நடித்தார். இந்த படம் இளம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர கிளாமர் ரூட்டில் களம் இறங்கினார். இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

அடுத்தடுத்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள, படங்கள் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இது ஒருபுறம் இருக்க… ரைசா வில்சன் தன்னுடைய அழகை கூட்டுவதற்காக, தற்போது… பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக கூறப்படுகிது.

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களில் இவரது, பியூட் போன் மிகவும் எடுப்பாக தெரிகிறது. ஆனால் பழைய புகைப்படங்களில் இவரது முகம் வேறு மாதிரி இருப்பது தான் இந்த சந்தேகத்திற்காக காரணம்.

மேலும் தற்போது நடிகை சமந்தா போல் ரைசா வில்சன் இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்த கூடுதல் அழகோடு… கருப்பு நிற கிளாமர் உடையில் எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஒரு முறை தன்னுடைய அழகை மெருகேற்றுவதற்காக, ஊசி போட்டு கொண்டு இவர் முகம் வீங்கியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *