விடாமுயற்சியில் ரஜினிகாந்தா? அஜர்பைஜானில் என்ன கோலத்தில் இருக்காரு பாருங்க

விடாமுயற்சியில் ரஜினிகாந்தா? அஜர்பைஜானில் என்ன கோலத்தில் இருக்காரு பாருங்க
  • PublishedOctober 4, 2023

லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ள விடாமுயற்சி திரைப்படம் அஜார் பைஜானில் ஆரம்பமாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கப் போவதாக வதந்திகள் கிளம்பியுள்ளன.

ஏஐ எனும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் கொண்டு ஏகப்பட்ட புகைப்படங்களை தத்ரூபமாக உருவாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமார் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு அஜர் பைஜானில் ஹாலிடே மோடில் இருக்கும்படியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

காவிரி விவகாரம் தொடர்பாக தொடர்ந்து நடிகர்களை வம்பிழுத்து வரும் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட அஜித்குமார் மற்றும் ரஜினிகாந்தின் புகைப்படங்களை ஷேர் செய்து, ” யாருடா நீங்கள் எல்லாம்” எனக் கேள்வி கேட்டுள்ளார்.

போட்டோஷாப் என்று தெரியாத அளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் மூலமாக வடிவமைக்கப்பட்ட அஜித் மற்றும் ரஜினிகாந்தின் புகைப்படங்களுடன் சேர்த்து விடாமுயற்சி படத்திலும் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் என மதில் திருமேனியும் லைகாவும் யோசிக்காத ஒரு கதையை உருவாக்கி விட்டனர்.

இதேவேளை, நேற்று போஸ்டர் வெளிவந்ததால், அஜித்தின் first look ரிலீஸ் செய்துள்ளது என்ற தகவலையும் இதில் சேர்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *