ராஜ்கிரணின் 2K வெர்ஷனான ஆர்யா- வெளியான காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் டீசர்

ராஜ்கிரணின் 2K வெர்ஷனான ஆர்யா- வெளியான காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் டீசர்
  • PublishedApril 1, 2023

ஆர்யா நடிப்பில் இறுதியாக கேப்டன் திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. இதனைத் தொடர்ந்து காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் கமிட் ஆகியிருந்தார். முத்தையா இயக்கும் இந்தப் படத்தை ஜீ ஸ்டுடியோஸ், டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ஆர்யாவுடன் சித்தி இத்னானி, பிரபு, கே பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆர்யா தற்போது காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்து வருகிறார். முத்தையா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. கொம்பன், மருது, விருமன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த முத்தையா, முதன்முறையாக ஆர்யாவுடன் கூட்டணி வைத்துள்ளார். ஆர்யா – முத்தையா கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தில் சித்தி இத்னானி, பிரபு, கே பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

கிராமத்து கதைக்களத்தில் ஆக்‌ஷன் காட்சிகளால் திணறடிக்கிறது இந்தப் படத்தின் டீசர். சுமார் 1.20 நிமிடம் வரை ஓடக்கூடிய இந்த டீசரில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆர்யாவின் ஆக்‌ஷன் ரசிகர்களையே புரட்டி எடுக்கும் வகையில் உள்ளது. இதுதான் இயக்குநர் முத்தையாவின் ஜானர் என்றாலும், நடு மண்டையில் அருவா வைத்து வெட்டுவதெல்லாம் ஓவர் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

 விரைவில் ரிலீஸ் தேதி

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் டீசர் ரசிகர்களிடம் ட்ரோல் கன்டெண்ட்டாக சிக்கியுள்ளது. மருது + கொம்பன் + விருமன் = காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் என ஒரு நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார். அதாவது இந்த 3 படங்களின் கலவை தான் இந்தப் படமும் என ட்ரோல் செய்துள்ளார். இன்னொரு பக்கம் ஆர்யா அப்படியே நடிகர் ராஜ்கிரணை நினைவுப்படுத்துவதாக கூறியுள்ளார். ராஜ்கிரணின் 2K வெர்ஷன் போல ஆர்யா ஆக்‌ஷனில் மிரட்டுவதாக கமெண்ட் செய்துள்ளார்.

தொடை தெரியும்படி வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஆர்யா சண்டை போடும் காட்சிகள், அப்படியே ராஜ்கிரணின் ஃபார்மட் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். கறுப்பு வேட்டி, கறுப்பு சட்டையுடன் வலம் வரும் ஆர்யா, பட்டா பட்டி தெரியும் வகையில் கால்களை தூக்கி வில்லன்களை கடாசி வருகிறார். ஆர்யாவின் சண்டைக் காட்சிகளை பார்க்கும் போது ராஜ்கிரணின் பைட் சீன்ஸ் தான் நினைவில் வருவதாகவும் அவர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இன்னொரு ரசிகர், மென்மேலும் மாறாத இயக்குநர் முத்தையா தேவையில்லாமல் மண் சார்ந்த படங்கள் எடுப்பது சார்பாக இந்தப் படம் வெற்றிபெற வாழ்த்துகள் என பங்கமாக கலாய்த்துள்ளார். இந்நிலையில், காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. இதனால், இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தப் படத்தை வெளியிட இயக்குநர் முத்தையா முடிவு செய்துள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *