நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனாவின் சம்பளம் இவ்வளவு கோடியா?

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனாவின் சம்பளம் இவ்வளவு கோடியா?
  • PublishedFebruary 11, 2024

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா குடகு மாநிலம் விராஜ்பேட்டையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். ராஷ்மிகா மந்தனா ஏப்ரல் 5, 1996 இல் பிறந்தார்.

இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பணியாற்றிய நடிகை ராஷ்மிகா மந்தனா, நான்கு SIIMA விருதுகளையும், ஒரு பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார்.

கிரிக் பார்ட்டி (2016) என்ற கன்னட திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய ராஷ்மிகா, அதன்பிறகு தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். ராஷ்மிகாவின் தந்தை மதன் மந்தனாவுக்கு விராஜ்பேட்டையில் காபி எஸ்டேட் மற்றும் செரினிட்டி என்ற விழா அரங்கம் உள்ளது.

இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகை ரஷ்மிகா நான்கு கோடி வரை சம்பளத்தை உயர்த்தி விட்டார் என்பதுதான் அது.

இதற்கு பதில் அளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா, “இந்த செய்திகளைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த செய்திகளை ஏன் பொய்யாக்க வேண்டும் ? இந்த செய்திகளைக் காட்டி, இதன்படி வாழ வேண்டும் என என் தயாரிப்பாளர்களிடம் அதே சம்பளம் கேட்கலாம் என்று நினைக்கிறேன். நான் சொல்வது சரிதானே ?” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *