“இப்படியும் நடிப்பேன், அப்படியும் நடிப்பேன்” பிரபல நடிகை ஓபன்

“இப்படியும் நடிப்பேன், அப்படியும் நடிப்பேன்” பிரபல நடிகை ஓபன்
  • PublishedFebruary 11, 2024

மலையாள மொழியில் கடந்த 1991ஆம் ஆண்டு நடிகையாக திரை உலகில் அறிமுகமானவர்தான் ஸ்வேதா மேனன். தமிழிலும் இவர் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தனது கவர்ச்சியான கதாபாத்திரத்தினால் ரசிகர்கள் நெஞ்சை ஈர்த்து வரும் ஸ்வேதா மேனன், கடந்த 2000 ஆவது ஆண்டு தமிழில் வெளியான “சிநேகிதியே” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு “சாதுமிரண்டால்” படத்திலும் “நான் அவனில்லை” படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “இணையத்தளம்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

இன்றளவும் மலையாள மொழியில் பல திரைப்படங்களில் அவர் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் அவர் கவர்ச்சியாக நடிப்பது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம்,

“நான் நடிப்பது என்ன கதாபாத்திரம் என்பதை அறிந்து தான் நான் நடிக்கின்றேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, பிக்னி அணிந்து நடிக்க வேண்டும் என்றாலும் நான் நடிப்பேன். கதை அம்சத்திற்கு தேவைப்பட்டால் நான் நிர்வாணமாகவும் நடிக்க தயார்” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *