அந்த நடிகருடனான நட்பு தான் விவாகரத்துக்கு காரணமா?.. லீக்கான ரகசியம்?

அந்த நடிகருடனான நட்பு தான் விவாகரத்துக்கு காரணமா?.. லீக்கான ரகசியம்?
  • PublishedMay 14, 2024

பிரபல நடிகர் திடீரென தனது மனைவியை பிரிய காரணமே இன்னொரு பிரபல நடிகருடனான நட்பு தான் காரணம் என திடுக்கிடும் தகவல்கள் கசியத் தொடங்கி உள்ளன.

ஏற்கனவே அந்த நடிகருடன் இணைந்துக் கொண்டு பல மோசமான செயல்களில் கணவர் ஈடுபட்டு வருவதை மனைவி கண்டித்த நிலையில், அந்த நடிகரை விட்டே பிரிந்து விட்டார்.

ஆனால், பல வருடங்கள் கழித்து மீண்டும் அந்த நடிகருடனான நட்பு தொடங்கியது தான் இளம் நடிகரின் வீட்டில் விவாகரத்து பஞ்சாயத்து வெடிக்கவே காரணம் எனக் கூறுகின்றனர். சினிமாவில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் வீட்டில் விவாகரத்து பிரச்சனை வெடிக்க காரணமாகவே அந்த பிரபல நடிகர் மற்றும் அவரது மோசமான நட்பு வட்டம் தான் காரணம் எனக் கூறுகின்றனர்.

ஆரம்ப காலக்கட்டத்தில் அந்த நடிகருடன் நட்பு இருந்து வந்த நிலையில், மனைவி சொன்னதன் காரணமாகவே அவருடன் பேச்சுவார்த்தையை அந்த இளம் நடிகர் நிறுத்திக் கொண்டார் என்று கூறுகின்றனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக மீண்டும் அந்த நடிகருடன் நட்பாக பழக ஆரம்பித்தது மனைவிக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை என்பதால் தான் சண்டை வெடித்தது என கிசுகிசுக்கள் கிளம்பி வருகின்றன.

சில நடிகைகள் தொடர்ந்து சில நடிகர்கள் என பலரது வாழ்க்கையில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற விவாகரத்து பஞ்சாயத்துக்கு பின்னணியில் அந்த பிரபல நடிகர் தான் உள்ளார் என்றும் அவரது கேங்கில் இணைந்து விட்டால் குடும்பத்தில் ஏகப்பட்ட சிக்கல்களும் சண்டைகளும் வெடிக்கும் என்றும் பகீர் கிளப்புகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *